தீய சக்திகளான எதிர்மறை ஆற்றல்களை, நம் வீட்டில் இருந்து வெளியேற்றவும், வீட்டினுள் நுழைவதை தடுக்கவும் சில வழிகள் இதோ,

வீட்டில் உள்ள அனைத்து ஜன்னல் மற்றும் கதவுகளை நன்கு திறந்து, எப்போதும் வீட்டை வெளிச்சமாக வைத்திருக்க வேண்டும். இதனால் வரும் காற்றோட்டம் மற்றும் வெயில் எதிர்மறை ஆற்றல்களை தடுத்துவிடும்.

வீட்டில் ஏதேனும் தேவையற்ற பொருட்களை வைக்கக் கூடாது. ஏனெனில் அது எதிர்மறை ஆற்றல்களை காந்தம் போல ஈர்த்துவிடும்.

வீட்டினுள் காலணிகள் போடாமல் வெறும் கால்களோடு நடக்கும் போது, நம்மிடம் உள்ள எதிர்மறை ஆற்றல்களை பூமி ஈர்த்துக் கொள்ளும். இதனால் நம் உடலின் ஆற்றல் சமநிலையில் இருக்கும்.

காலணிகளை வெளியே விட்டுட்டு வீட்டுக்குள் நுழையும் போது, கால்களை தண்ணீரில் நன்கு கழுவி விட்டு செல்ல வேண்டும். இதனால் வெளியே உள்ள எதிர்மறை ஆற்றல்கள் நம் வீட்டிற்குள் நுழையாது.

நம் வீட்டு தோட்டத்தில் தினமும் நடைபயிற்சி செய்வது நல்லது. இதனால் நேர்மறை ஆற்றல்களை ஊக்கமளித்து, அது நமக்கு புத்துணர்வை அளிக்கும்.

வீட்டின் தரையை பெருக்கும் போது, அந்த குப்பைகளை வெளியில் போட்டு விட வேண்டும். இதனால் நம் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் அந்த குப்பையோடு போய்விடும்.

கல் உப்பிற்கு எதிர்மறை ஆற்றலை வெளியேற்றும் சக்தி உள்ளது. எனவே வீட்டை துடைத்து கழுவும் போது, ஒரு கையளவு கல் உப்பு கலந்த நீரை பயன்படுத்த வேண்டும்.

நம் வீட்டை சுற்றிலும் தொட்டிகல்ளை அமைத்து, அதில் செடிகள் மற்றும் மரங்களை வளர்த்து வந்தால், அது எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றிவிடும்.

கல் உப்பு கரைத்த நீரில் குளத்தல் அல்லது கை கால்களை அடிக்கடி சிறிது நேரம் உப்பு கலந்த நீரில் ஊறவைத்தால், நம் உடலில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் போய்விடும்.

வீட்டில் தினமும் பிரார்த்தனைகள் செய்வதுடன், நம் மனதில் நல்ல எண்ணம், செயல், பேச்சு என்று அனைத்தும் நேர்மறையாக இருந்தால், எதிர்மறை ஆற்றல்கள் அதிகரிக்காது.