உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும்.

எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும். அன்றைய கிரக நிலைகளைப் பற்றித் தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்றபடி அன்றைய தினத்தைத் திட்டமிட்டாலே போதும் இது சிறப்பான நாளாக அமையும்.

மேஷம்:
நண்பர்களிடம் தேவையில்லாத வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பொதுக் கூட்டங்களில் பேசுகின்ற பொழுது, கொஞ்சம் நிதானப் போக்கினைக் கடைபிடிப்பது நல்லது. மற்றவர்களுடைய செயல்பாடுகளை விமர்ச்சிக்காமல் இருப்பது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தாமல் இருக்கும். முக்கிய காரியங்களில் ஏதேனும் முடிவுகள் எடுக்க வேண்டியிருந்தால் கொஞ்சம் நிதானமாக இருங்கள். மனதுக்குள் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.

ரிஷபம்:
வர்த்தகம் சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்களுக்கு கூடுதல் லாபம் உண்டாகும். வீட்டின் பொருளாதார நிலை உயரும். உங்களுடைய உயர் அதிகாரிகளுடன் கொஞ்சம் கூடுதல் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். எதிர்காலம் சம்பந்தப்பட்ட திட்டங்களை வகுப்பது நல்லது. உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

மிதுனம்:
வீட்டில் உங்களுக்குக் கிடைக்கும் சுப செய்திகளால் மகிழ்ச்சியான சூழல்கள் உருவாகும். நீங்கள் எதிர்புாராத இடத்திலிருந்து பண வரவு வந்து சேரும். திட்டமிட்ட பணிகள் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். வியாபாரங்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும். பணிகளில் இருந்து வந்த கஷ்டங்கள் நீங்கும். உடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் உங்களுடைய மதிப்பு உயர ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

கடகம்:
உங்களுடைய சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். மனதுக்குள் இருந்து வந்த கவலைகள் நீங்கும். உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள். அரசு சம்பந்தப்பட்ட பணிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உங்களுடைய பதவியில் மாற்றங்கள் ஏற்படும். வருமான உயர்வுக்கான வாய்ப்புகள் அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

சிம்மம்:
தொழில் சம்பந்தப்பட்ட நுணுக்கங்களை கற்றுக் கொள்ள ஆர்வம் அதிகரிக்கும். புதிய செயல் திட்டங்களைச் செயல்படுத்த முயற்சி செய்வீர்கள். வெளியூர் தொழில் முயற்சிகளினால் லாபம் அதிகரிக்கும். பணியில் பல்வேறு பிரச்சினைகளை சுமூகமாக முடிக்க முயற்சி செய்வீர்கள். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். வீட்டில் பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

கன்னி:
புதிதாக வீடு மற்றும் மனைகள் வாங்குவதற்கான வாய்ப்புகளை உங்களைத் தேடி வரும். வீட்டில் பிள்ளைகளுடைய செயல்பாடுகளால் பெருமை அடைவீர்கள். கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு பெருமையும் நல்ல முன்னேற்றமும் உண்டாகும். வீட்டில் உள்ளவர்களால் பெரும் மகிழ்ச்சி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

துலாம்:
தொழில் சம்பந்தமாக தேவையில்லாத அலைச்சலும் மனச்சோர்வும் உண்டாகும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான பொருளாதார முன்னேற்றங்கள் உண்டாகும். செய்கின்ற தொழிலில் சின்ன சின்ன மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும். அதனால் லாபமும் உண்டாகும். வாடிக்கையாளர்களிடம் கொஞ்சம் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 9 ஆகவும் அதிர்ஷ்ட திசை தென்கிழக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறம் இளம் மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.

விருச்சிகம்:
நீங்கள் மனதில் நினைத்த காரியங்களை மிகச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய உயர் அதிகாரிகளால் பெரிதும் பாராட்டப்படுவீர்கள். உங்களுடைய எண்ணங்களிலும் சிந்தனைகளிலும் மாற்றங்கள் ஏற்படும். வீடு மற்றும் மனை வாங்குவது குறித்த ஆலோசனைகளை மேற்கொள்வீர்கள். கல்வித்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். பொது விவாதங்களில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

தனுசு:
தொழிலை அடுத்தகட்டத்துக்கு நகர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களுடைய உயர் அதிகாரிகளின் மூலம் உங்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும். மனதுக்குள் தோன்றிய எண்ணங்களை தைரியத்துடன் நடைமுறைப் படுத்துங்கள். வீட்டில் குழந்தைகளுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

மகரம்:
பணியில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். பொதுக் கூட்டங்களில் பேசுகின்ற பொழுது, எதிர்பார்த்த ஆதரவு கிடைப்பது கொஞ்சம் கடினமானதாக இருகு்கும். உங்களுடைய செய்தொழிலில் புதிய முதலீட்டாளர்கள் உருவாவார்கள். உடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களிடம் கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். கோவில் சம்பந்தப்பட்ட பணிகளை மேற்கொள்வதில் உங்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கும்பம்:
ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும். தொழில் பங்குதாரர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம்ஏற்படும். வீட்டில் உள்ளவர்களின் தேவைகளை அறிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி நிவர்த்தி செய்வீர்கள். உங்களுடைய எண்ணங்களில் தெளிவு பிறக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

மீனம்:
உங்களுடைய அமைதியான செயல்பாடுகளினால் மகிழ்ச்சியான சூழல்கள் உருவாகும். வெளிவட்டாரங்களில் உங்களுக்கு செல்வாக்குகள் உயர ஆரம்பிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். காது சம்பந்தப்பட்ட தொற்றுகள் குறையும். மனதுக்குள் ஒருவிதமான பதற்றமான சூழல் காணப்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.