96’ படத்தை விஷால் தடுக்க முயற்சித்தாரா? விஜய் சேதுபதி பதில்

96’ படத்தை விஷால் தடுக்க முயற்சித்தாரா? விஜய் சேதுபதி பதில்

நந்த கோபால் தயாரிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம்  96. இந்த படம் காதலர்கள் மற்றும்vஇளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை படக்குழுவினர் சென்னையில் நடத்தினார்கள். அப்போது படக்குழுவினரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்வி

எழுப்பினார்கள். விஜய் சேதுபதியிடம் ‘96 படம் நிதி நெருக்கடியில் சிக்கியது குறித்தும் படம் வெளியாவதை விஷால் தடுக்க முயற்சி செய்ததாக வெளியான தகவல் குறித்தும் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்து விஜய் சேதுபதி கூறியதாவது:–

‘‘என் வாழ்க்கையில் பலமுறை இது போன்ற சம்பவங்களை கடந்து வந்துள்ளேன். விஷால்
ரொம்பவே நல்ல மனிதர். அவரை குறை சொல்லவில்லை. தவறு யார் மீதும் இல்லை. விஷால்
சூழல் என்னவோ? அவர் எவ்வளவு ரூபாய்க்கு வட்டி கட்டுகிறாரோ? அவருக்கு என்ன
நடந்ததோ? யாருக்கு தெரியும்.

எனக்கு அவர் மீது துளியும் வருத்தம் இல்லை. அது எனக்கு தவறாகவே தெரியவில்லை. அவர் இதற்கு முன் எவ்வளவு பணத்தை விட்டுக் கொடுத்தாரோ? அதெல்லாம் அவருக்கு மட்டும் தான் தெரியும். தற்போது இந்த பணத்தையும் அவர் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். இதுவே அவருடைய பெரிய மனது. அதனால் வருத்தப்படுவதற்கு ஒன்றுமேயில்லை.

அன்று நான் செஸ் போர்டு காயாக விளையாடப்பட்டேன். இதற்கு யார் மீது பழி சுமத்துவீர்கள்? சீமராஜாவிற்கு முன் சிவகார்த்திகேயனுக்கு என்ன நடந்தது என்று தெரியும். நடிகர் விமலுக்கு என்ன நடந்தது தெரியும்.

இது எல்லோருக்கும் நடக்கும் இயல்பான வி‌ஷயம். அதற்காக நான் பைனான்சியர்கள் மீது குறை சொல்லவில்லை. ஒரு தயாரிப்பாளருக்கும், பைனான்சியருக்கும் பணம் தான் அடையாளம். அதே போல் நடிகர்களான எங்களுக்கு படம் தான் மரியாதை. படம் வெளியாகவேண்டும். அது தான் முக்கியம்.’’  என்றார்,

SUBSCRIBE