தேங்காய் பால் பட்டாணி பிரியாணி

தேங்காய் பால் பட்டாணி பிரியாணி மதியம் எப்போதும் சாம்பார், குழம்பு, ரசம், பொரியல் என்ற செய்து சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் இன்று மதியம் தேங்காய் பால் பட்டாணி பிரியாணி செய்து சுவையுங்கள்.

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி – 1 கப்

பட்டாணி – 1/2 கப்
வெங்காயம் – 1
கெட்டியான தேங்காய் பால் – 1 கப்
தண்ணீர் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு…

புதினா – 1/2 கப்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 5
வரமிளகாய் – 2
துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி – 1/2 இன்ச்
பூண்டு – 10 பற்கள்

தாளிப்பதற்கு…

நெய் – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
பிரியாணி இலை – 1
பட்டை – 1/4 இன்ச்

கிராம்பு – 2 ஏலக்காய் – 1
செய்முறை :

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ள வேண்டும்.

பாசுமதி அரிசியை நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு கிளறி விட வேண்டும்.

பின்பு அதில் பட்டாணி, தேவையான அளவு உப்பு மற்றும் பாசுமதி அரிசி சேர்த்து கிளறி, தேங்காய் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி, மீண்டும் கிளறி, தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, குக்கரை மூடி 3 விசில் போட்டு இறக்கவும்.

விசில் போனதும் குக்கரை திறந்தால், தேங்காய் பால் பட்டாணி பிரியாணி ரெடி!!!