இந்தோனேஷிய நிலநடுக்கம் 5000 பேர் மிஸ்சிங்..!

இந்தோனேஷிய நிலநடுக்கம் 5000 பேர் மிஸ்சிங்..!

இந்தோனேஷியாவில் சுனாமி மட்டும் நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின்எண்ணிக்கை 1800 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேஷியாவில் 7.5 ரிக்டர் அளவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மேலும் 5 அடி உயரத்தில் பயங்கர ஆக்ரோஷத்துடன் சுனாமி தாக்கியது. இதனால் பல கட்டிடங்களும், கார்களும் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டது.

கடற்கரை திருவிழாவில் பங்கேற்ற ஏராளமான மக்கள் சுனாமியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் சுனாமி மற்றும் நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1800 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5000க்கும் மேற்பட்டோர் காணவில்லை எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக, மீட்புப்படை அதிகாரிகள் கூறுகையில், சுமார் 62,359 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தற்போது வரை 2,549 பேர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், பல அடுக்குமாடி குடியிருப்புகள், ஓட்டல்கள் என பல கட்டிடங்களின் இடிபாடுகள் அகற்றப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை  உயரலாம் என தெரிவித்துள்ளனர்.