விஜய்யின் சர்க்கார் படத்துடன் மோதும் பிரபல நடிகர்!

விஜய்யின் சர்க்கார் படத்துடன் மோதும் பிரபல நடிகர்!

தமிழ் சினிமாவின் தற்போதைய பெரும் எதிர்பார்ப்பு சர்க்கார் படம் தான். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் ஜோடி நடித்துள்ளனர். அண்மையில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. ஏற்கனவே அஜித் நடித்துள்ள விஸ்வாசம் வெளியாவதாக இருந்து பொங்கலுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அது ரசிகர்களுக்கு வருத்தம் தான்.

தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படம் வெளியாவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது விஜய் ஆண்டனி நடித்துள்ள திமிரு புடிச்சவன் படமும் வெளியாகவுள்ளதாம்.

விஜய் ஒரு நிகழ்ச்சிக்கு வந்தாலே ரசிகர்கள் கூட்டம் திரளாக கூடிவிடும். அண்மையில் பாண்டிச்சேரியில் நடந்த கல்யாணம் இப்போது உங்களுக்கு நினைவிற்கு வந்திருக்குமே.

அதை விடுங்கள். அவர் நடித்துள்ள சர்க்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று. பெரியளவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதில் விஜய், உசுப்பேத்துறவங்க கிட்ட உம்முனும், கடுப்பேத்துறவங்ககிட்ட கம்முனும் இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும் என கூறினார். இது மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்த டையலாக்கை தற்போது அவரின் ரசிகை என்னுடையது என சொந்தம் கொண்டாடினார். இதற்காக அவர் ஒரு ரசிகையாக அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த டையலாக்கை கடந்த வருடத்தின் தொடக்கத்திலேயே வேறு ஒருவர் பதிவிட்டிடுக்கிறார்கள். இதனால் ரசிகர்களுக்கே குழப்பம் தான்.

SUBSCRIBE